அண்ணாமலை சுய விளம்பரத்துக்காக செயல்படுகிறார்- அழகிரி


அண்ணாமலை சுய விளம்பரத்துக்காக செயல்படுகிறார்- அழகிரி
x

முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறி அண்ணாமலை சுய விளம்பரத்துக்காக செயல்படுகிறார் என அழகிரி குற்றம் சாட்டினார்.

தஞ்சாவூர்

முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறி அண்ணாமலை சுய விளம்பரத்துக்காக செயல்படுகிறார் என அழகிரி குற்றம் சாட்டினார்.

கொடியேற்று நிகழ்ச்சி

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே மல்லிப்பட்டினம் கடைவீதியில் காங்கிரஸ் கொடியேற்று நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் நாகூர்கனி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி காங்கிரஸ் கொடியினை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் நாகை மாவட்ட தலைவர் அமிர்தராஜ், சேதுபாவாசத்திரம் வட்டார தலைவர் சேக் இப்ராம்சா, மாவட்ட கவுன்சிலர் நெப்போலியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து அதிராம்பட்டினம் பகுதிக்கு சென்ற அழகிரிக்கு நகர தலைவர் தமீம் அன்சாரி தலைமையில் பட்டுக்கோட்டை நகர தலைவர் வக்கீல் ராமசாமி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். அப்போது அழகிரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சுய விளம்பரத்துக்காக...

பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள் முழுவதும் சுய விளம்பரத்துக்காகவே அமைந்துள்ளன. அவர் சுய விளம்பரத்துக்காக முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறி வருகிறார். அண்ணாமலையினுடைய இந்த செயல்பாடு அவருடைய கட்சியினருக்கே பிடிக்கவில்லை. அண்ணாமலை ஊழல் பட்டியல் வெளியிடுவேன் என்று கூறினார்.

ஆனால் தற்போது ஊழல் பட்டிலை வெளியிடாமல் சொத்துப்பட்டியலை வெளியிட்டுள்ளார். இந்த சொத்துப்பட்டியலை உண்மை என்று கருதினால் கூட, அவர் வெளியிட்டு இருந்த சொத்தின் மதிப்பு என்பது தவறானது. மத்திய அரசின் அலட்சியப்போக்கு காரணமாக நமது ராணுவ வீரர்களை தொடர்ந்து இழந்து வருகிறோம். இதற்கு புல்வாமா தாக்குதல் போன்ற தாக்குதல்களே உதாரணமாக உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story