ஆலங்குடி தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம்
ஆலங்குடி தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
ஆலங்குடியில், புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் சார்பில் தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. திருவரங்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.பி.கே.டி. தங்க மணி அனைவரையும் வரவேற்று பேசினார். சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தலைமை தாங்கினார். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தெற்கு ஒன்றிய செயலாளர் அரு.வடிவேல், மாவட்ட துணை செயலாளர் ஞான.இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அமைச்சர்கள் பேசுகையில், வருகிற 5-ந் தேதி புதுக்கோட்டையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாநாடு பாராட்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது. மாநாட்டு விழாவிற்கு ஜல்லிக்கட்டு ஆர்வலர்களை அதிக அளவு அழைத்து வர அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். மாநாடு பாராட்டு விழாவானது இந்திய துணை கண்டத்திலேயே புதுக்கோட்டையை திரும்பி பார்க்க வைக்க வேண்டும். தமிழகத்தில் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் முதன் முதலில் தச்சங்குறிச்சி கிராமத்தில் தான் நடைபெற்றது என்றனர். கூட்டத்தில் துணை செயலாளர் செங்கோல் மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர், நகர, கழக தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் ஆலங்குடி நகர செயலாளர் பழனிகுமார் நன்றி கூறினார்.