ஆலங்குளம் மாணவி தேர்வு


ஆலங்குளம் மாணவி தேர்வு
x
தினத்தந்தி 6 Dec 2022 12:15 AM IST (Updated: 6 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேசிய போட்டியில் பங்கேற்கும் தமிழக கபடி அணிக்கு ஆலங்குளம் மாணவி தேர்வு செய்யப்பட்டார்

தென்காசி

ஆலங்குளம்:

32-வது தேசிய சப்-ஜூனியர் மகளிர் கபடி போட்டி ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக தமிழக சப்- ஜூனியர் வீராங்கனைகள் அணி தேர்வு அண்மையில் சேலத்தில் நடைபெற்றது. இதில், மாநிலம் முழுவதும் இருந்து 250-க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இதில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள காளாத்திமடத்தைச் சேர்ந்த லோடு ஆட்டோ ஓட்டி தொழில் நடத்தி வரும் டிரைவர் சேர்மன்- முத்துகனி தம்பதியின் இரண்டாவது மகளும், தென்றல் அணி வீராங்கனையுமான அஜி மாய்ஸா தமிழ்நாடு‌ மகளிர் அணிக்காக தேர்வாகியுள்ளார். இவர் ஆலங்குளம் அருகே உள்ள நல்லூர் மேற்கு திருநெல்வேலி மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

தேசிய போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவியை, தென்காசி மாவட்ட அமெச்சூர் கபடி கழக நிர்வாகிகள், மாணவியின் பயிற்சியாளர்கள் மணி டேவிட், உதயசூரியன், ஸ்டீபன் மற்றும் பள்ளித்தலைமை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பாராட்டினர்.



Next Story