வைக்கோலில் பதுக்கி வைத்திருந்த 400 மது பாட்டில்கள் பறிமுதல்
வைக்கோலில் பதுக்கி வைத்திருந்த 400 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மயிலாடுதுறை
சீர்காழி அருகே உள்ள தென்னலக்குடி மெயின் ரோடு பகுதியை சேர்ந்த தரணி பாபு மனைவி செல்வி. இவர் தனது வீட்டின் பின் புறத்தில் உள்ள வைக்கோலில் புதுச்சேரி மது பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வைத்தீஸ்வரன் கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார், சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது வைக்கோலில் 400 மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீார் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள செல்வியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story