ராமநாதபுரம் அருகே கடல் சீற்றத்தால் கரை ஒதுங்கிய பாசி, தாழை செடிகள்


ராமநாதபுரம் அருகே கடல் சீற்றத்தால் கரை ஒதுங்கிய பாசி, தாழை செடிகள்
x

ராமநாதபுரம் அருகே கடல் சீற்றத்தால் கரை ஒதுங்கிய பாசி, தாழை செடிகள்

ராமநாதபுரம்

பனைக்குளம்,

இலங்கையை ஒட்டிய கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகின்றது. அது போல் ராமநாதபுரம் மாவட்டத்திலும் பல ஊர்களில் நல்ல மழை பெய்து வருகின்றது. இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், அரியமான் ஆற்றங்கரை உள்ளிட்ட கடல் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றமாகவே காணப்பட்டு வருகின்றது. இதனிடையே பலத்த சூறாவளி காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக கடலின் அடியில் வளர்ந்து நிற்கும் பல அரிய வகையான கடல் பாசிகள் மற்றும் தாழை செடிகளும், கடல் புற்களும் ஆற்றங்கரை முகத்துவார கடலை ஒட்டிய கடற்கரைப் பகுதியில் மலை போல் குவிந்து கரை ஒதுங்கி கிடக்கின்றன. ஆற்றங்கரை முகத்துவார கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கி கிடக்கும் இந்த தாழை செடி மற்றும் கடல் பாசிகளை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆச்சரியத்தோடு பார்த்துச் செல்கின்றனர். ஆற்றங்கரை முதல் அழகன்குளம், பனைக்குளம் வரையிலான கடற்கரை பகுதிகளிலும் ஆங்காங்கே தாழை செடி மற்றும் கடல் பாசிகளும் கடல் சீற்றத்தால் கரை ஒதுங்கிக் கிடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story