அனைத்து பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்


அனைத்து பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 20 Jan 2023 12:15 AM IST (Updated: 20 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தைக்காலில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் இருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தைக்கால் கிராமம் உள்ளது. இங்கு பிரம்பால் செய்யப்பட்ட கலைநயமிக்க பொருட்கள் அதிக அளவில் தயாரிக்கப்படுகிறது. இந்த பொருட்களை உள்ளூர், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தைக்கால் பஸ் நிறுத்தத்தில் பெரும்பான்மையான பஸ்கள் நின்று செல்வதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கொள்ளிடத்திலோ அல்லது 4 கிலோமீட்டர் தூரம் உள்ள புத்தூர் பகுதிக்கோ சென்றுதான் பஸ் ஏறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து தைக்கால் வியாபாரிகள் சங்க தலைவர் முஸ்தபா கூறுகையில்:- சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் முக்கிய வழித்தடத்தில் தைக்கால் உள்ளது.இங்கிருந்து சிதம்பரம் மற்றும் சீர்காழி பகுதிக்கு செல்ல அனைத்து பஸ்களும் முன்பு நின்று சென்ற நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பஸ்கள் நின்று செல்லவில்லை. இதனால் கிராம மக்களும், பள்ளி மாணவர்களும் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தைக்கால் கிராமத்தில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி தைக்காலில் பஸ் நிறுத்தத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.


Related Tags :
Next Story