வேலை அளிக்கும் அனைத்து நிறுவனங்களும்வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயம்:தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்


வேலை அளிக்கும் அனைத்து நிறுவனங்களும்வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயம்:தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்
x
தினத்தந்தி 29 Jan 2023 12:15 AM IST (Updated: 29 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வேலை அளிக்கும் அனைத்து நிறுவனங்களும் வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை இணையதளத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று தொழிலாளர் உதவி ஆணையர் சிவக்குமார் தெரிவித்தார்.

தேனி

வடமாநில தொழிலாளர்கள்

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு வேலைகளிலும் வடமாநில தொழிலாளர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அப்போது வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பினர். ஆனால், வெளிமாநில தொழிலாளர்கள் குறித்த புள்ளி விவரங்கள் எதுவும் இல்லாததால் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதில் அரசு துறை அதிகாரிகள் பல்வேறு இடையூறுகளை சந்தித்தனர்.

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தமிழகம் மீண்டு, இயல்பு நிலைக்கு தொழில் நிறுவனங்கள் திரும்பியுள்ளன. இதனால் வடமாநில தொழிலாளர்கள் மீண்டும் வந்த வண்ணம் உள்ளனர். தேனி மாவட்டத்தில் கடைகள், ஓட்டல்கள், தொழிற்சாலைகள், விவசாய தோட்டங்கள் தேயிலை தோட்டங்கள் உள்பட பல்வேறு இடங்களிலும் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பதிவு கட்டாயம்

இதையடுத்து வெளிமாநில தொழிலாளர்கள் விவரங்களை தொழிலாளர் நலத்துறையின் இணையதளத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று தொழிலாளர் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தேனி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சிவக்குமார் கூறுகையில்,

"வெளிமாநில தொழிலாளர்களை பணியமர்த்தும் அனைத்து நிறுவனங்களும், தங்களிடம் பணியாற்றும் வெளிமாநில தொழிலாளர்களின் பெயர், விவரங்களை labour.tn.gov.in/ism என்ற இணையதளத்தில் கட்டாயம் விடுதல் இன்றி பதிவேற்றம் செய்ய வேண்டும். தொழிலாளர்களின் பெயர், ஆதார் எண், வங்கிக் கணக்கு எண், முழுமையான முகவரி ஆகிய விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்" என்றார்.


Related Tags :
Next Story