மாற்றுதிறனாளிகளுக்கான முகாமில் அனைத்து பிரிவு டாக்டர்களும் பங்கேற்க உத்தரவு


மாற்றுதிறனாளிகளுக்கான முகாமில் அனைத்து பிரிவு டாக்டர்களும் பங்கேற்க உத்தரவு
x

மாற்றுதிறனாளிகளுக்கான முகாமில் அனைத்து பிரிவு டாக்டர்களும் பங்கேற்க வேண்டும் என கலெக்டர் பாஸ்கரபாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பத்தூர்

மாற்றுதிறனாளிகளுக்கான முகாமில் அனைத்து பிரிவு டாக்டர்களும் பங்கேற்க வேண்டும் என கலெக்டர் பாஸ்கரபாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

சிறப்புமுகாம்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் செவ்வாய்கிழமை தோறும் மாற்றுதிறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெறும் என்றும், இதில் அனைத்து துறையினரும் கலந்து கொள்ள வேண்டும் என கலெக்டர் பாஸ்கரபாண்டியன் உத்தரவிட்டு இருந்தார். அதன்படி நேற்று 200 க்கும் மேற்பட்ட மாற்றுதிறனாளிகள் வந்து இருந்தனர். ஆனால் முகாமுக்கு வந்த மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏதும் செய்யப்படவில்லை. மேலும் வயாதனவர்கள் நீண்டவரிசையில் காத்து இருந்தனர்.

முகாம் நடைபெறும் கூட்டரங்கில் கூட்ட நெரிசல் அதிகமானதால், மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்ய வந்த டாக்டர்களும் திணறினர்.

அப்போது அங்கு திடீரென வந்த கலெக்டர் பாஸ்கரபாண்டியன் கட்டுக்கடங்காத கூட்டத்தை பார்த்ததும் பல மாற்றுத்திறனாளிகள் மனு அளிக்க நீண்ட நேரமாக வரிசையில் கையில் மனுவுடன், உதவிக்கு வந்தவர்களின் உதவியுடன் நிற்பதை பார்த்ததும் கோபம் அடைந்து அங்கிருந்த அனைத்து அதிகாரிகளையும் வரவழைத்து கேள்வி எழுப்பினார்.

மனுக்கள் பதிவு

இதைதொடர்ந்து நாற்காலிகள் வரவழைக்கப்பட்டு வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்த மாற்றுத்திறனாளிகள் அமர வைக்கப்பட்டனர். பிறகு, ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு அவர்களது மனுக்கள் பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகு, அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கான முகாமில் மூளை மற்றும் நரம்பு பிரிவு மருத்துவர், கண் விழி பரிசோதர்கள், இருதய நிபுணர் போன்ற அனைத்து வகையான மருத்துவர்களும் வரவேண்டும் என அப்போது கலெக்டர் பாஸ்கரபாண்டியன் உத்தரவிட்டார்.

மதிய உணவு

முகாமில் 150 மாற்றுதிறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை, 10 பேருக்கு வங்கி கடன் உதவி என மொத்தம் 164 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10 லட்சத்து 21 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கி, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் உள்ளங்கள் சார்பில் வழங்கப்பட்ட மதிய உணவை அவர்களுடன் ஒன்றாக அம்ந்து அமர்ந்து சாப்பிட்டார்.

முகாமில் மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் பாலாஜி, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் மாரிமுத்து, மனநலமருத்துவர் பிரபாவராணி, உதவும் உள்ளங்கள் அமைப்பின் தலைவர் ரமேஷ், டாக்டர்கள் பரான்சவுத், தன்வீர்அஹமத், தமிழரசன், கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story