அனைத்துத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்பு முகாம்
பள்ளக்குறிச்சி பஞ்சாயத்தில் அனைத்துத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்பு முகாம் நடந்தது
தட்டார்மடம்:
சாத்தான்குளம் ஒன்றியம் பள்ளக்குறிச்சி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்பு முகாம் நடந்தது.
முகாமுக்கு பஞ்சாயத்து தலைவர் சித்ராங்கதன் தலைமை தாங்கினார். சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் டார்வின் வரவேற்றார். இதில் ஒன்றிய உதவி பொறியாளர் அருணாதேவி, சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் லெனின், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பால் ஆபிரகாம் ஆகியோர் திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தனர். இதில் சொக்கன்விளை -மணிநகர் விலக்கு வரை தார் சாலை அமைக்கவும், ஆட்டு கொட்டகை, மாட்டு கொட்டகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை தொடர்பாக பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டது.
இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராதாகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் மந்திரராஜன், சுகாதார செவிலியர் பகவதி அம்மாள், வார்டு உறுப்பினர்கள் சீதா, சண்முகசுந்தரம், நிஷாந்தி, ராசாத்தி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் ராஜேஷ் நன்றி கூறினார்.