தகுதி வாய்ந்த அனைத்து பெண்களுக்கும் கட்டாயம் மகளிர் உரிமைத் தொகை வந்து சேரும் -அமைச்சர் எ.வ.வேலு


தகுதி வாய்ந்த அனைத்து பெண்களுக்கும் கட்டாயம் மகளிர் உரிமைத் தொகை வந்து சேரும் -அமைச்சர் எ.வ.வேலு
x

தகுதி வாய்ந்த அனைத்து பெண்களுக்கும் கட்டாயம் மகளிர் உரிமைத் தொகை வந்து சேரும் என்று அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

திருவண்ணாமலை

தண்டராம்பட்டு

தகுதி வாய்ந்த அனைத்து பெண்களுக்கும் கட்டாயம் மகளிர் உரிமைத் தொகை வந்து சேரும் என்று அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

பள்ளி கட்டிடம் திறப்பு விழா

தண்டராம்பட்டு அருகில் ராதாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட தாழனோடை பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.21 லட்சம் மதிப்பில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

இதேபோல் ராதாபுரம், நல்லவன் பாளையம் ஆகிய ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடை திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது.

விழாவில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலு தலைமை தாங்கி புதிய பள்ளி கட்டிடம் மற்றும் ரேஷன் கடைகளை திறந்து குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

விழாவில் அமைச்சர் எ.வ.வேலு பள்ளி குழந்தைகளை அழைத்து அவர்களோடு பேசி நலம் விசாரித்து உரையாடினார்.

அதனை தொடர்ந்து அவர் பேசியதாவது:-

பெண்கள் முன்னேற்றத்திற்கான அரசாக திகழ்ந்து வருகிறது. காரணம் போடப்படுகின்ற அத்தனை திட்டங்களும் பெண்களுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுத்தப்படுகிறது.

தற்போது கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் நோக்கத்தை சீர்குலைப்பதற்காக சிலர் விஷமத்தனங்களை செய்கிறார்கள். எல்லா மகளிருக்கும் தானே ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

ஆனால் இந்த திட்டத்தின் நோக்கமே பொருளாதாரத்தில் நலிவடைந்திருக்கிற பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கிடைத்தால் தங்கள் குடும்ப செலவிற்கு அது உதவியாக இருக்கும். பெண்களின் பொருளாதார உதவிக்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

தகுதி உள்ள அனைவருக்கும் கிடைக்கும்

தகுதியுடைய அனைவருக்கும் இந்த திட்டத்தின் பயன் நிச்சயமாக வந்து சேரும்.

கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த போது அப்போதைய உணவுத்துறை அமைச்சராக நான் பணியாற்றினேன். அதற்கு முன் ரேஷன் கடைகளில் சர்க்கரை, மண்ணெண்ணெய், அரிசி மட்டுமே வழங்கப்பட்டது.

பருப்பு, சமையல் எண்ணெய் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வெளி மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.

எனவே குடும்பப் பெண்களின் நலன் கருதி குடும்ப பொருளாதாரத்திற்கு உதவியாக இருக்க வேண்டும் என்பதற்காக ் அவர்கள் ரேஷன் கடைகளில் 30 ரூபாய்க்கு துவரம்பருப்பு உளுந்தம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட உணவுப் பொருட்களையும் வழங்குவதற்கு ஆணை பிறப்பித்தார் அதை தொடர்ந்து அவரது பிள்ளையாக இருக்கிற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் பெண்களுக்கான முன்னேற்றத் திட்டங்களை தொடர்ந்து வழங்கி வருகிறார்.

இவ்வாறு பேசினார்

நிகழ்ச்சிகளில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் முருகேஷ், மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், சரவணன் எம்.எல்.ஏ. தலைமை செயற்குழு உறுப்பினர் இரா ஸ்ரீதரன், ஒன்றிய குழு தலைவர் பரிமளா கலையரசன், ஒன்றிய செயலாளர்கள் பி. கோவிந்தன், மெய்யூர் சந்திரன், கூட்டுறவு இணைப்பதிவாளர் கோ. நடராஜன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசன் மூர்த்தி, மாவட்ட திமுக துணை செயலாளர் பிரியா விஜயரங்கன் பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், மாவட்ட விவசாயி அணி அமைப்பாளர் மெய்கண்டன் அருணை கன்ஸ்ட்ரக்ஷன் துரை வெங்கட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வந்தவாசி

அமைச்சர் எ.வ.வேலு வந்தவாசி பாலுடையார் தெரு அருகில், மழையூர் ஆகிய இடங்களில் உள்ள நியாய விலைக் கடைகளில் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம் நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன்பின்னர் அவர் கூறுகையில், ''மாவட்டத்தில் மொத்தத்தில் இதுவரை 4 லட்சம் பேர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற பதிவு செய்துள்ளனர்'' என்றார்.

ஆய்வின்போது கலெக்டர் பா.முருகேஷ், செய்யாறு சப்- கலெக்டர் அனாமிகா, தி.மு.க. மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன், வந்தவாசி எஸ்.அம்பேத்குமார் எம்.எல்.ஏ., ஒன்றியக்குழுத் தலைவர் கமலாட்சி இளங்கோவன், நகரச் செயலாளர் ஆ.தயாளன், ஒன்றியச் செயலாளர்கள் ப.இளங்கோவன், மா.சுந்தரேசன், சிஆர்.பெருமாள், கேஆர்பி.பழனி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Next Story