அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட ஆலோசனை கூட்டம்
தலைஞாயிறு அருகே அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட ஆலோசனை கூட்டம்
நாகப்பட்டினம்
வாய்மேடு:
தலைஞாயிறை அடுத்த பண்ணத்தெரு ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினகுமார் தலைமை தாங்கினார். மாநில விவசாயிகள் குழு உறுப்பினர் மகாகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரங்கபாஷ்யம், வேளாண் அலுவலர் நவீன் குமார், வேளாண்மை உதவி இயக்குனர் வேதரத்தினம் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் குடிநீர், சாலை வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் கோரிக்கை மனுவை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராமலிங்கத்திடம் வழங்கினர். இதுகுறித்து உரிய துறைகளுக்கு மனுக்களை அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story