அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட கூட்டம்
போலகம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட கூட்டம் நடந்தது.
திட்டச்சேரி:
திருமருகல் ஒன்றியம் போலகம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பவுஜியா பேகம் அபுசாலி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பாத்திமா ஆரோக்கிய மேரி, ஒன்றியக்குழு உறுப்பினர் லதா அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, மயான வசதி, சமுதாயக்கூடம் அமைத்து தர கோரி சுமார் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.இதில் மாவட்ட உதவி திட்ட அலுவலர் ரவி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் பாரத் குமார், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் முத்துகிருஷ்ணன், கூட்டுறவு சார்பதிவாளர் அலுவலர் குணபாலன், திருமருகல் வருவாய் ஆய்வாளர் சுந்தர், கால்நடை உதவி மருத்துவர் முத்துக்குமரன், வட்டார கல்வி அலுவலர் ஜெயந்தி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கற்பகம் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு தங்கள் துறைகள் மூலம் வழங்கப்படும் திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறினார்.முடிவில் ஊராட்சி செயலாளர் சாமிநாதன் நன்றி கூறினர்.