40 தொகுதிகளிலும் 'இந்தியா' கூட்டணி வெற்றி பெறும் - செல்வப்பெருந்தகை


40 தொகுதிகளிலும் இந்தியா  கூட்டணி வெற்றி பெறும் - செல்வப்பெருந்தகை
x
தினத்தந்தி 9 March 2024 9:51 PM IST (Updated: 10 March 2024 6:38 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க. தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க. ஸ்டாலினை சந்தித்து காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் ஆலோசனை நடத்தினர்.

இந்த நிலையில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 9 தொகுதிகள் , புதுச்சேரியில் 1 தொகுதி என 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை கூறுகையில் ,

40 தொகுதிகளிலும் 'இந்தியா' கூட்டணி வெற்றி பெறும். காங்கிரஸ் எந்தெந்த தொகுதிகளில் களம் காண்கிறது என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும். ;இந்தியா' கூட்டணி மிகவும் ஒற்றுமையாக உள்ளது. என தெரிவித்தார்.


Next Story