அனைத்து கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்


அனைத்து கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 April 2023 12:15 AM IST (Updated: 1 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடையத்தில் அனைத்து கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தென்காசி

கடையம்:

தமிழக- கேரள எல்லைப் பகுதியான புளியரை சோதனைச் சாவடி வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் கனிம வளங்களான எம்.சாண்டு மணல், கல், உள்ளிட்டவை அதிகளவில் ஏற்றிச் செல்கின்றனர். இதை கண்டித்து இயற்கை வள பாதுகாப்பு சங்க தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ரவி அருணன் தலைமையில் நேற்று கடையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடையம் ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர் டி.கே.பாண்டியன், கீழக்கடையம் பஞ்சாயத்து தலைவரும், ஆர்ப்பாட்ட ஒருங்கிணைப்பாளருமான பூமிநாத், இயற்கை வள பாதுகாப்பு சங்க செயலாளர் ஜாமின், பஞ்சாயத்து தலைவர்கள் முத்துலட்சுமி ராமதுரை (தெற்கு கடையம்), அருணாசலம் (அனந்த பெருமாள் நாடானூர்), கணேசன் (பொட்டல்புதூர்), முத்தமிழ் செல்வி (மடத்தூர்), செண்பகவல்லி (துப்பாக்குடி), பிரேமராதா (தெற்கு மடத்தூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். முல்லை நிலை தமிழர் விடுதலைக் கட்சி கரும்புள்ளி கண்ணன், நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கவேல், நாம் தமிழர் மேற்கு மாவட்ட செயலாளர் தினகரன் ஆகியோர் கண்டனஉரையாற்றினர்.

அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ராஜசேகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் மதியழகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் அன்பழகன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் முத்துராஜன், கடையம் ஒன்றிய அ.தி.மு.க. கவுன்சிலர் புளி கணேசன், ஆழ்வார்குறிச்சி பேரூர் கழகச் செயலாளர் சங்கர் மற்றும் காங்கிரஸ், பா.ஜனதா, தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சியினர் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடையம், பொட்டல்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் வியாபாரிகள் கடைகளை அடைத்தனர்.


Next Story