ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நிலுவையில் உள்ள பணிகளை விரைவு படுத்த வேண்டும் என்று மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சத்தியபாமா உத்தரவிட்டுள்ளார்.
ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நிலுவையில் உள்ள பணிகளை விரைவு படுத்த வேண்டும் என்று மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சத்தியபாமா உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர்
ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நிலுவையில் உள்ள பணிகளை விரைவு படுத்த வேண்டும் என்று மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சத்தியபாமா உத்தரவிட்டுள்ளார்.
மாவட்ட ஊராட்சி குழு கூட்டம்
திருப்பூர் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம், நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. குழு தலைவர் சத்தியபாமா தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி செயலாளர் முரளிக்கண்ணன், துணை தலைவர் சிவகாமி முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பங்கேற்ற அரசுத்துறை அலுவலர்கள், துறை சார்ந்த திட்டங்கள் குறித்தும், விண்ணப்பிக்கும் முறைகள் குறித்தும் விளக்கி கூறினார்கள்.
பொங்கலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அலகுமலை ஊராட்சியில் நீண்ட நாட்களாக பூட்டி கிடக்கும் சமுதாயக்கூடத்தை திறக்க வேண்டும். கொரோனா காலத்தில் அமைக்கப்பட்ட படுக்கைகள் அகற்றப்படாமல் இருப்பதால் மக்கள் பயன்படுத்த முடியவில்லை. எனவே சமுதாயக்கூடத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டுமென, கவுன்சிலர் பழனிசாமி கூறினார்.
ஊராட்சிகளில் பழுதாகியுள்ள, குப்பை அள்ளும் பேட்டரி வாகனத்தை சீரமைத்து கொடுக்க, அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். கிராமங்களில், கூடுதலாக தூய்மை காவலரை நியமிக்க வேண்டுமென கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர். ஒன்றிய கவுன்சிலர்களுடன் கலந்துபேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என செயலாளர் கூறினார்.
பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
கூட்டத்தில் தலைவர் பேசும்போது, 'மாவட்ட ஊராட்சி குழு மூலம் நடக்கும் பணிகளில், ரூ. 4 கோடியே 75 லட்சம் மதிப்பிலான பணிகள் நிலுவையில் உள்ளன. ஒன்றியம் வாரியான நிலுவை பணி விவரம் தெரிவிக்கப்படும். ஒன்றிய ஆணையாளர்களுடன் பேசி, பணிகளை வேகப்படுத்த வேண்டும். ஒவ்வொரு வார்டிலும், ரூ.10 லட்சம் மதிப்பிலான பணிகளை தேர்வு செய்து வழங்க வேண்டும் என்றார்.
செயலாளர் பேசும்போது, 15-வது மாநில நிதிக்குழு மானியத்தில் நடக்கும் பணிகளை நிறைவேற்றுவதில், மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் 2-வது இடத்தில் இருக்கிறது. வருகிற 31-ந் தேதிக்குள் பணிகளை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றார்.