அனைத்துத்துறை ஓய்வூதியா் சங்க கூட்டம்
அனைத்துத்துறை ஓய்வூதியா் சங்க கூட்டம்
நாகப்பட்டினம்
வேதாரண்யம் அருகே அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட பேரவை கூட்டம் செம்போடையில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்டத்தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். வட்டத்தலைவர் குணசேகரன் வரவேற்றார். அரசு ஊழியா் சங்க மாவட்டச்செயலாளர் அன்பழகன் தொடக்க உரையாற்றினார். இதில் சங்க மாவட்டச்செயலாளர் சிவகுமார், மாவட்ட பொருளாளா் குணசேகரன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர்கள், இணைச்செயலாளர்கள், வட்டத்தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் கலந்து கொண்டனர். இதில் சங்க மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி பேசினார். கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட இணைச்செயலாளர் வேதரெத்தினம் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story