அனைத்து வியாபாரிகள் கடையடைப்பு-ஆர்ப்பாட்டம்


அனைத்து வியாபாரிகள் கடையடைப்பு-ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Feb 2023 12:15 AM IST (Updated: 28 Feb 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

மூங்கில்துறைப்பட்டு சர்க்கரை ஆலையில் இருந்து கரித்துகள் வெளியேறுவதை கட்டுப்படுத்தக்கோரி அனைத்து வியாபாரிகள் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு

கடையடைப்பு

மூங்கில்துறைப்பட்டு அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் மூங்கில்துறைப்பட்டு கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இருந்து கரித்துகள் வெளியேறுதை கட்டுப்படுத்தகோரி கடை அடைப்பு, ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தனர்.

அந்த வகையில் நேற்று காலை மூங்கில்துறைப்பட்டு பஸ் நிறுத்தத்தில் வியாபாரிகள் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மூங்கில்துறைப்பட்டு அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாநில இணை செயலாளர் சீனிவாசன், மாவட்ட துணை தலைவர் சிவக்குமார், இணை செயலாளர்கள் செல்வராஜ், ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் கனகராஜ் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் டைமன்ராஜா வெள்ளையன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

மிகப்பொிய பேராட்டம்

இதில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். மூங்கில்துறைப்பட்டில் உள்ள கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை 1-ல் கரும்பு அரவை காலங்களில் ஆலையிலிருந்து அதிக அளவில் கரித்துகள்வெளியேறுவதால் சுற்றுவட்டார மக்கள் கடும் சிரமப்பட்டு வருவதோடு, வாகன ஓட்டிகளும் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இந்த கரித்துகள்களால் உடல்நலம் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் சுவாச கோளாறும் ஏற்படுகிறது. எனவே சர்க்கரை ஆலையில் இருந்து வெளியேறும் கரித் துகளை கட்டுப்படுத்தவேண்டும், நடவடிக்கை எடு்க்க தவறினால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என கூறி எச்சரித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்த வணிகர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டனர். முடிவில் அனைத்து வியாபாரிகள் சங்க பொருளாளர் கோகுல்ராம் நன்றி கூறினார்.


Next Story