கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்ட செயலாக்க குழு கூட்டம்


கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்ட செயலாக்க குழு கூட்டம்
x
தினத்தந்தி 13 May 2023 12:15 AM IST (Updated: 13 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருநகரி ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்ட செயலாக்க குழு கூட்டம் நடந்தது. இதில் வேளாண்மை உதவி இயக்குனர் கலந்து கொண்டார்.

மயிலாடுதுறை

சீர்காழி:

திருநகரி ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்ட செயலாக்க குழு கூட்டம் நடந்தது. இதில் வேளாண்மை உதவி இயக்குனர் கலந்து கொண்டார்.

செயலாக்க குழு கூட்டம்

சீர்காழி வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் திருநகரி, மங்கைமடம், திருவெண்காடு, நாங்கூர், செம்பதனிருப்பு, திட்டை மற்றும் மருதங்குடி ஆகிய 7 ஊராட்சியில் செயல்படுத்தபடவுள்ளது. இதன் ஒரு கட்டமாக நேற்று திருநகரி ஊராட்சியில் திட்ட செயலாக்க குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், தற்போது வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண்மை விற்பனை துறைகளுடன் சேர்த்து 13 துறைகள் இணைந்து தேர்வு செய்யப்பட்ட கிராமங்களை தன்னிறைவு அடைய செய்வதே இத்திட்டத்தின் நோக்கம்.

விவசாயிகள் பயன்பெற வேண்டும்

இந்த ஆண்டு் செயல்படுத்த படும் திட்டங்களில் 80 சதவீதம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்ட கிராமங்களில் மட்டுமே செயல்படுத்தப்படும் மற்றும் மற்ற துறைகளை ஒருங்கிணைத்து அந்தந்த துறைகளின் திட்டமும் செயல்படுத்தப்படும். எனவே இந்ததிட்டத்தில் ஊராட்சியில் உள்ள அனைத்து விவசாயிகளும் பயன்பெற வேண்டும் என்றார். ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜன் முன்னிலை வாகித்தார். முடிவில் உதவி வேளாண்மை அலுவலர் வேதயராஜன் நன்றி கூறினார். இந்த கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story