தட்டார்மடத்தில்அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் செயல்பட தொடங்கியது


தட்டார்மடத்தில்அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் செயல்பட தொடங்கியது
x
தினத்தந்தி 9 Aug 2023 12:15 AM IST (Updated: 9 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தட்டார்மடத்தில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் செயல்பட தொடங்கியது

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளத்தில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் அமைக்க தமிழக காவல்துறை தலைவர் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாமா பத்மினி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு ஆகியோர் நியமிக்கப்பட்டனர். மேலும் போலீஸ் நிலையத்துக்கு தேவையான போலீசாரும் நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மகளிர் போலீஸ் நிலையத்துக்கு பழைய தாலுகா அலுவலக கட்டிடத்தை ஒதுக்க வேண்டும் என அங்குள்ள பொதுமக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் வலியுறுத்தினர். ஆனால் அந்த கட்டிடம் கட்டப்பட்டு 100 ஆண்டுகள் ஆனதால் அதனை ஆய்வு செய்த பொதுப்பணித்துறையினர் இதில் போலீஸ் நிலையம் செயல்பட அனுமதி மறுத்துவிட்டனர். இதனால் பழைய தாலுகா அலுவலக எதிரே உள்ள கூட்டரங்கை செயல்பட அனுமதிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் முறையிடப்பட்டது. ஆனால் பழைய தாலுகா அலுவலக கூட்டரங்கு பொதுப்பணித்துறை அனுமதி அளித்தால் மட்டுமே மகளிர் போலீஸ் நிலையம் அமைக்க செயல்பட அனுமதிக்க முடியும் என மாவட்ட கலெக்டர் அலுவலக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே தனியார் வாடகை கட்டிடத்தில் மகளிர் போலீ்ஸ் நிலையம் செயல்பட தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் பரவியது. இதற்கு வியாபாரிகள் சங்கத்தினர், அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் தட்டார்மடம் போலீஸ் நிலைய மாடியில் உள்ள ஒரு அறை தேர்வு செய்யப்பட்டு நேற்று முன்தினம் முதல் செயல்பட தொடங்கியது.

சாத்தான்குளத்தில் மகளிர் போலீஸ் நிலையம் செயல்படுவதற்கு தேவையான இடம் தேர்வு செய்யப்படும் வரை தற்காலிகமாக தட்டார்மடத்தில் செயல்படும் என போலீசார் தெரிவித்தனர்.


Next Story