அல்லிநகரம் அரசு பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
தேனி அல்லிநகரம் அரசு பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல், தேனி போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் சார்பில், தேனி நாடார் சரசுவதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. அதில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போதைப்பொருள் ஒழிப்பு குறித்த பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. போதைப்பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் பேசினர். நிகழ்ச்சியில் போலீசார் மற்றும் மாணவ, மாணவிகள் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.