ஆல்கொண்டமால் கோவிலில் தமிழர் திருநாள் திருவிழா
ஆல்கொண்டமால் கோவிலில் தமிழர் திருநாள் திருவிழா வருகிற 16-ந் தேதி தொடங்குகிறது. இதையொட்டி தற்காலிக கடைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
ஆல்கொண்டமால்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சோமவாரப்பட்டியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆல்கொண்டமால் கோவில் உள்ளது. கால்நடைகளின் காவல் தெய்வமாக இக்கோவில் விளங்கி வருகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெறும் தமிழர் திருநாள் திருவிழாவின்போது தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான கிராம மக்கள் வந்து ஆல்கொண்டமாலை வழிபட்டு செல்கின்றனர்.
மேலும் கால்நடைகளுக்கு ஏஆல்கொண்டமால் கோவிலில் தமிழர் திருநாள் திருவிழாஆல்கொண்டமால் கோவிலில் தமிழர் திருநாள் திருவிழாற்படும் பிரச்சினைகளுக்கு உருவ பொம்மைகளை வைத்து வழிபாடு செய்தும், கால்நடை வளம் பெருக கறவைபாலை கொண்டு வந்து அபிஷேகம் செய்து திருநீரும், தீர்த்தமும் பெற்றுச் செல்கின்றனர். திருவிழாவின் போது கோவிலை சுற்றிலும் பல்வேறு கேளிக்கை விளையாட்டுகள், கடைகள் அமைக்கப்படுவது வழக்கம். கோவில் திருவிழாவின் போது கிராமங்களில் இருந்து கொண்டு வரப்படும் சலங்கை மாடு ஆட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது.
16-ந் தேதி தொடங்குகிறது
ஆல்கொண்டமால் கோவில் தமிழர் திருநாள் திருவிழாவை முன்னிட்டு வருகிற 16-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் பகல் 11 மணிக்கு சிறப்பு பூஜையும், மாலை 6 மணிக்கு உழவர் திருநாள் சிறப்பு பூஜையும் நடக்கிறது. 17-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் பகல் 11 மணிக்கு சிறப்பு பூஜையும் 18-ந்தேதி காலை 5 மணிக்கு சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும், மாலை 6 மணிக்கு மகாஅபிஷேகமும், இரவு 7 மணிக்கு மகாதீபாராதனையும், சிறப்பு அலங்காரமும், இரவு 9 மணிக்கு சாமி திருவீதி உலா நிகழ்ச்சியும், அதனைத்தொடர்ந்து வாண வேடிக்கையும் நடக்கிறது. விழாவில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் ராமசாமி, கோவில் தக்கார் அமரநாதன் ஆகியோர் செய்துவருகின்றனர்.