நந்தன் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு


நந்தன் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு
x

நந்தன் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் துரைமுருகன் காட்பாடியில் கூறினார்.

வேலூர்

அமைச்சர்கள் ஆய்வு

வேலூர் மாவட்டம் காட்பாடி கல்புதூர் பகுதியில் அம்ருத் திட்டத்தின் கீழ் 12.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. இதிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யும் பணியையும், காந்திநகர் 9-வது வார்டில் மாதிரி நகர்திட்டப் பணியின் கீழ் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தையும், சமுதாய கூட கட்டிடத்தையும், அம்ருத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளையும் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருஆகியோர் ஆய்வு செய்தனர்.

மேலும் 11-வது வார்டு திருநகர் பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய சாலை பணிகள் குறித்தும், மதிநகர் அருப்புமேடு சாலையில் மேற்கொள்ள வேண்டிய கால்வாய் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.

ஒப்பந்ததாரர் ஓடிவிட்டார்

இதில் கல்புதூர் ராஜீவ்காந்தி நகரில் அம்ருத் திட்டத்தின் கீழ் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி முடிக்கப்பட்டு ஒப்பந்ததாரர் ஓடிவிட்டார். குடிநீர் ஆங்காங்கே பைப்களில் தண்ணீர் உடைந்து வீணாகிறது என அமைச்சர் துரைமுருகன் கூறினார். அதற்கு அமைச்சர் நேரு, ஒப்பந்ததாரர் பணி முடிந்துவிட்டதாக ஓடிவிட்டார் என கூறினார்.

பின்னர் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;

நந்தன் கால்வாய் திட்டம்

தென்பென்னை -பாலாறு திட்டம் இணைப்புக்காக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறுவது உண்மை தான். ஆய்வு தான் நடக்கிறது.மேலும் நந்தன் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அது எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என தெரியவில்லை. திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.

ஆய்வின்போது வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, டி.எம்.கதிர்ஆனந்த் எம்.பி., ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, துணை மேயர் எம். சுனில்குமார், கமிஷ்னர் ரத்தினசாமி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, மாநகராட்சி கவுன்சிலர்கள் கே.அன்பு, சரவணன் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story