திருவட்டார் கோவிலை சுற்றி வண்ண கற்கள் பதிக்க நிதி ஒதுக்கீடு; அதிகாரி ஆய்வு


திருவட்டார் கோவிலை சுற்றி வண்ண கற்கள் பதிக்க நிதி ஒதுக்கீடு; அதிகாரி ஆய்வு
x

திருவட்டார் கோவிலை சுற்றி வண்ண கற்கள் பதிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணியை அதிகாரி ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி

திருவட்டார்,

திருவட்டார் கோவிலை சுற்றி வண்ண கற்கள் பதிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணியை அதிகாரி ஆய்வு செய்தார்.

அதிகாரி ஆய்வு

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா அடுத்த மாதம் 6-ந் தேதி நடைபெற உள்ளதால் அதன் அருகே உள்ள மோசமான சாலைகளை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதுதொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் கலெக்டர் அரவிந்த் முன்னிலையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கோவிலைச் சுற்றியுள்ள சாலைகள் உடனே சரி செய்யப்படும் என தெரிவித்தனர்.

இந்தநிலையில் திருவட்டார் பேரூராட்சியில் இருந்து கோவில் படித்துறை ரூ.17 லட்சம் செலவிலும், கோவிலை சுற்றி வண்ணக்கற்கள் பதிக்க ரூ.10 லட்சம் செலவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து நேற்று மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் விஜய லெட்சுமி, பொறியாளர் ஷெரீப் முகமது, இளநிலை பொறியாளர் ஜெசி, அறநிலையத்துறை உதவி கோட்ட பொறியாளர் மோகன் தாஸ், பொறியாளர் ராஜ்குமார், திருவட்டார் கோவில் மேலாளர் மோகன்குமார், திருவட்டார் பேரூராட்சி செயல் அலுவலர் மகாராஜன், தலைவர் பெனிலா ரமேஷ், துணைத்தலைவர் சுந்தர்ராஜ் ஆகியோர் சாலை அமைக்கும் வேலை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். மேலும் கார் பார்க்கிங், குடிநீர் வசதி, பக்தர்கள் வரும் வழி, திரும்பிச்செல்லும் வழி ஆகியன குறித்தும் ஆலோசனை நடத்தினர்.


Next Story