அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழாவுக்கு ரூ.1½ கோடி நிதி ஒதுக்கீடு


அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழாவுக்கு ரூ.1½ கோடி நிதி ஒதுக்கீடு
x

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத்திருவிழாவுக்கு ரூ.1½ கோடி நிதி ஒதுக்கீடு செய்து நகரமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத்திருவிழாவுக்கு ரூ.1½ கோடி நிதி ஒதுக்கீடு செய்து நகரமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நகரமன்ற கூட்டம்

திருவண்ணாமலை நகராட்சி அலுவலக கூட்டரங்கில் நகரமன்ற அவசர கூட்டம் நடைபெற்றது.

நகரமன்றத் தலைவர் நிர்மலா வேல்மாறன் தலைமை தாங்கினார். நகராட்சி துணைத்தலைவர் ராஜாங்கம் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையர் முருகேசன் வரவேற்றார்.

கூட்டத்தில் நகராட்சியின் செயல்பாடுகளில் பொதுமக்கள் பங்களிப்பினை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக அனைத்து வார்டுகளிலும் கவுன்சிலர்களை தலைவராக கொண்டு வார்டுக்குழு மற்றும் ஒவ்வொரு வார்டுகளில் 4 பகுதி சபாக்கள் அமைக்கப்பட்டு எல்லைகள் வரையறை செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ரூ.1½ கோடி நிதி ஒதுக்கீடு

மேலும் திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழாவின் போது பொது சுகாதார பணிகள், அடிப்படை வசதிகள் மற்றும் இதர பணிகள் மேற்கொள்ள தோராய செலவினமாக ரூ.1 கோடியே 66 லட்சத்து 97 ஆயிரம் ஒதுக்கீடு செய்வது குறித்தும், நகராட்சி பகுதியில் அடிப்படை வசதிகள் மேற்கொள்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்வது என்பன உள்ளிட்ட 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் நகராட்சி பணியாளர்கள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story