அரசு பள்ளிகளில் வகுப்பறைகள் கட்ட ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு
வேலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் வகுப்பறைகள் கட்ட ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கூடுதலாக வகுப்பறை கட்டிடங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களில் 114 வகுப்பறை கட்டிடங்கள் கட்ட ரூ.15 கோடியே 96 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன்படி வேலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல்மொணவூர், கருகம்பத்தூர், புலிமேடு, ஜமால்புரம், ஊசூர், சிவநாதபுரம் மற்றும் அத்தியூர் ஆகிய பகுதிகளில் பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் கட்ட ரூ.1 கோடியே 92 லட்சத்து 25 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதேபோல் கணியம்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட கனிகனியான், காட்டுப்புத்தூர், அருனகிரிபேட்டை, சலமநத்தம், துத்திப்பட்டு, கீழ்வல்லம், கேசவபுரம், பாலாத்துவண்ணான், நாயக்கனேரி மற்றும் சோழவரம் ஆகிய பகுதிகளில் பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் கட்ட ரூ.2 கோடியே 84 லட்சத்து 65 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிட பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.