அடிப்படை பணிகள் செய்ய ரூ.5¼ கோடி ஒதுக்கீடு


அடிப்படை பணிகள் செய்ய ரூ.5¼ கோடி ஒதுக்கீடு
x

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் அடிப்படை வசதிகள் செய்ய ரூ.5 கோடியே 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் தலைவர் தெரிவித்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் அடிப்படை வசதிகள் செய்ய ரூ.5 கோடியே 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் தலைவர் தெரிவித்தார்.

மாவட்ட ஊராட்சி கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டம், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார் தலைமையில் நடைபெற்றது. ஊராட்சிகள் உதவி இயக்குனர் விஜயகுமாரி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் பேசிய தலைவர் என்.கே.ஆர் சூர்யகுமார் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் தங்களது ஊராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்து கொள்ள 15-வது மத்திய மானிய நிதி மூலம் தலா ரூ.15 லட்சம், மாநில 15-வது நிதி குழு மூலம் தலா ரூ.25 லட்சம் என ஒவ்வொரு உறுப்பினருக்கும் ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஊராட்சி பகுதிகளில் அங்கன்வாடி, பள்ளி மற்றும் சமையலறை கூடம், கழிவு நீர் கால்வாய்கள் கட்டிக்கொள்ள ரூ.5 கோடியே 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் எந்த பகுதியில் என்ன தேவை என்று அறிந்து தேவையான பணி விவரங்களை எழுதிக் கொடுத்தால் உடனடியாக பணிகள் செய்ய உத்தரவிடப்படும் என தெரிவித்தார்.

புதிய அலுவலகம்

அதைத்தொடர்ந்து பூங்குளம் முனிவேல, (தி.மு.க.) வக்கீல் குணசேகரன் (தி.மு.க.), சுபாஷ் சந்திர போஸ்ல (வி.சி.க.), சுப்பிரமணி (தி.மு.க.), கவிதா தண்டபாணி (தி.மு.க.) உள்ளிட்டோர் பேசினர்.

உதவி திட்ட அலுவலர் விஜயகுமாரி பதிலளித்தார். பின்னர் பேசிய தலைவர் மாவட்ட ஊராட்சி அலுவலகம் கட்ட இடம் ஒதுக்கீடு செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. புதுப்பேட்டை ரோடு ெரயில்வே மேம்பாலம் அருகே அருங்காட்சியம், மாவட்ட நூலகம், மாவட்ட அலுவலர்களுக்கான குடியிருப்புகள் கட்ட திட்டம் தயாரிக்கப்பட்டு மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ெரயில்வே நிர்வாகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. ஒப்புதல் வந்தவுடன் ரூ.5 கோடி செலவில் புதிய மாவட்ட ஊராட்சி குழு அலுவலகம் அங்கு கட்டப்பட உள்ளது என கூறினார். முடிவில் ஆரோக்கியநாதன் நன்றி கூறினார்.


Next Story