வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள ரூ.88 லட்சம் ஒதுக்கீடு
வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள ரூ.88 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளதாக கந்திலி ஒன்றியக்குழு தலைவர் தெரிவித்தார்.
கந்திலி ஊராட்சி ஒன்றிய குழுக்குழு கூட்டம், ஒன்றியக் குழு தலைவர் திருமதி திருமுருகன் தலைமையில் நடந்தத. துணைத் தலைவர் ஜி.மோகன்குமார் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாவதி வரவேற்றார்.
கூட்டத்தில் கந்திலி ஒன்றிய குழு உறுப்பினர்கள் தங்களது ஊராட்சி பகுதிகளில் பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை பழுது பார்த்து, வர்ணம் பூச ஒவ்வொரு கவுன்சிலருக்கும் தலா ரூ.4 லட்சம் விதம் 22 கவுன்சிலருக்கு ரூ.88 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கவுன்சிலர்கள் தங்களது பகுதியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து எழுதிக் கொடுத்தால் பணி மேற்பார்வையாளர்கள் நேரில் வந்து ஆய்வு செய்து பணிக்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து டெண்டர் வைக்கப்பட்டு பணிகள் தொடங்க ஏற்பாடு செய்யப்படும் என தலைவர் தெரிவித்தார். மேலும் மோட்டூர் ஊராட்சி சின்னமோட்டூர் கிராமத்தில் ஆழ்துளை கிணறு மற்றும் புதிய மோட்டார் அமைக்க ரூ.4,24,000 செலவு செய்ய மன்றம் அனுமதி அளிக்கலாம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.