அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு


அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு
x
தினத்தந்தி 18 July 2022 9:01 PM GMT (Updated: 18 July 2022 9:10 PM GMT)

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்ய, நாளை முதல் 3 நாட்களுக்கு சிறப்பு முகாம் நடக்கிறது.

மதுரை

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்ய, நாளை முதல் 3 நாட்களுக்கு சிறப்பு முகாம் நடக்கிறது.

மறுகுடியமர்வு

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக மதுரை மாநகராட்சி எல்லைக்கு அருகில் உள்ள ராஜாக்கூர், கரடிக்கல், உச்சப்பட்டி ஆகிய 3 திட்டப்பகுதிகளில் 2,024 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தில் கட்டப்படும் குடியிருப்புகளுக்கு மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட அரசுக்கு சொந்தமான நீர்நிலை வகைப்பாடு கொண்ட ஆட்சேபகரமான புறம்போக்கு பகுதியில் குடியிருந்து வரும் ஆக்கிரமிப்பாளர்களை மறுகுடியமர்வு செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், நகர்ப்புற வீடற்ற ஏழைகளுக்கு பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர்களுக்கும் வீடுகள் ஒதுக்கீடு செய்ய மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்ட விதிகளின்படி நிபந்தனைகளுக்கு உட்பட்டு அடுக்குமாடி குடியிருப்புகள் தேவைப்படுவோர், கீழ்க்கண்ட விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம். அதன்படி விண்ணப்பதாரர் பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ வேறு எங்கும் வீடோ, வீட்டடி மனையோ இருக்க கூடாது. விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.25 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும்.

ஆதார் நகல்

அதற்கு விண்ணப்பதாரர் மற்றும் மனைவி-கணவன் ஆதார் அட்டை நகல் இணைக்க வேண்டும். பயனாளியின் பங்களிப்புத் தொகையை செலுத்துவதற்கான சம்மதக் கடிதம் இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பதாரர்கள் முன் பணமாக ரூ.10 ஆயிரம் வங்கி வரைவோலையை "THE EXECUTIVE ENGINEER, TNUHDB, Madurai Division, Madurai" என்ற பெயரில் எடுத்து விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். இந்த திட்டப்பகுதிகளில் குடியிருப்பு வேண்டுவோர் விண்ணப்பிப்பதற்கு நாளை (புதன்கிழமை) முதல் 23-ந் தேதி வரை 4 நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம், கே.கே.நகரில் உள்ள தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story