தூய்மை பணியாளர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு


தூய்மை பணியாளர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு
x
தினத்தந்தி 8 Oct 2022 12:15 AM IST (Updated: 8 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூய்மை பணியாளர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு ஆணைகளை நகராட்சி தலைவர் வழங்கினார்.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி நகராட்சியில் பனந்தோப்பு பகுதியில் ரூ.3 கோடியில் கட்டப்பட்ட தூய்மை பணியாளர்களுக்கான குடியிருப்புகளில் பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆணையாளர் லெட்சுமணன் தலைமை தாங்கினார். நகர் நல அலுவலர் டாக்டர் திவ்யா வரவேற்றார். நகர்மன்ற தலைவர் முத்துத்துரை தூய்மை பணியாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 24 வீடுகளுக்கான ஆணைகளை வழங்கினார்.நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத்தலைவர் குணசேகரன், நகர்மன்ற உறுப்பினர்கள் மெய்யர், கண்ணன், சித்திக், கார்த்தி, திவ்யா சக்தி, பசும்பொன் மனோகரன், சுகாதார ஆய்வாளர்கள் சுந்தர், பிருந்தா, ஆதிநாராயணன், பாண்டி செல்வம், லோகநாதன், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி சொக்கலிங்கம், நகர் நலச்சங்க தலைவர் காரை சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story