வீட்டு வசதிவாரியத்தில் ஒதுக்கீடு பெற்றவர்கள் வட்டிச்சலுகையுடன் நிலுவைத் தொகையை செலுத்தலாம்: கலெக்டர்


வீட்டு வசதிவாரியத்தில் ஒதுக்கீடு பெற்றவர்கள்  வட்டிச்சலுகையுடன் நிலுவைத்   தொகையை செலுத்தலாம்: கலெக்டர்
x
தினத்தந்தி 26 Nov 2022 12:15 AM IST (Updated: 26 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

வீட்டு வசதிவாரியத்தில் ஒதுக்கீடு பெற்றவர்கள் வட்டிச்சலுகையுடன் நிலுவைத் தொகையை செலுத்தலாம் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

நெல்லை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பிரிவுக்கு உட்பட்ட திட்டப் பகுதிகளில் ஒதுக்கீடு பெற்று, விற்பனை பத்திரம் பெறாமல் உள்ளவர்களில் தகுதியான ஒதுக்கீடுதாரர்களுக்கு வட்டி தள்ளுபடி சலுகை 3.5.2023 வரை அமலில் இருக்கும். ஆகையால் தகுதியான ஒதுக்கீடுதாரர்கள் நெல்லை வீட்டு வசதி பிரிவு அலுவலகத்தை அணுகி தங்களது ஒதுக்கீட்டுக்கான நிலுவைத் தொகையை 03.05.23 தேதிக்குள் செலுத்தி விற்பனை பத்திரம் பெற்றுக் கொள்ளலாம். 03.05.23-க்கு பின்னர் வட்டி தள்ளுபடி சலுகை கிடையாது என்பதால், இந்த வாய்ப்பை ஒதுக்கீடுதாரர்கள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தகவலை கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.


Next Story