மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி


மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி
x

மணிமுத்தாறு அருவியில் குளிக்க இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது

திருநெல்வேலி

அம்பை:

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்றதும் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும் அருவியுமான நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் தற்போது கனமழையினால் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க கடந்த 10 நாட்களுக்கு மேலாக வனத்துறை தடை விதித்திருந்தது. இந்தநிலையில் நீர்வரத்து குறைந்ததால் இன்று (புதன்கிழமை) முதல் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதித்து இருப்பதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story