முப்பிடாதி அம்மன் கோவில் கொடை விழாவில் அன்னதானம்
சிவகிரி முப்பிடாதி அம்மன் கோவில் கொடை விழாவில் அன்னதானம் நடந்தது.
தென்காசி
சிவகிரி:
சிவகிரியில் தெற்கு ரத வீதியும், மேலரத வீதியும் சந்திக்கும் முகப்பு பகுதியில் அமைந்துள்ள பி.எஸ்.ஆர்.தெருவில் உள்ள முப்பிடாதி அம்மன் கோவிலில் கொடை விழா நடைபெற்றது. இதையொட்டி தீர்த்தம் எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள், தீபாராதனை மற்றும் பொங்கல் படையலிட்டு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழாவும், அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக சிவகிரி நகர பஞ்சாயத்து தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு, துணைத்தலைவர் லட்சுமிராமன் ஆகியோர் கலந்து கொண்டு அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். கவுன்சிலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story