அபிராமேஸ்வரர் கோவிலில் அன்னதான திட்டம்


அபிராமேஸ்வரர் கோவிலில் அன்னதான திட்டம்
x
தினத்தந்தி 11 Jan 2023 12:15 AM IST (Updated: 11 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டம் திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் அன்னதான திட்டம் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவில் மாவட்ட கலெக்டர் மோகன் தொடங்கி வைத்து மக்களோடு, மக்களாக அமர்ந்து உணவு சாப்பிட்டார்

விழுப்புரம்

விழுப்புரம்

முன்னதாக அவர் பேசுகையில், தமிழகம் முழுவதும் இன்று(நேற்று)10 கோவில்களில் அன்னதான திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் விழுப்புரம் மாவட்டத்தில் வரலாற்று பெருமைமிக்க ஸ்தலமான திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோவிலும் இடம்பெற்றுள்ளது நமக்கெல்லாம் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்கனவே மொத்தம் 13 கோவில்களில் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதிதாக அன்னதான திட்டம் தொடங்கப்படவுள்ள இக்கோவிலையும் சேர்த்து மொத்தம் 14 கோவில்களில் அன்னதானம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.

விழாவில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், கோலியனூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சச்சிதானந்தம், விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சிவக்குமார், கோவில் செயல் அலுவலர் கார்த்திகேயன், திருவாமாத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் மும்மூர்த்தி, ஒன்றியக்குழு துணைத்தலைவர் உதயகுமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் கவிதா தயாளன், பாஸ்கரன், ஒன்றிய கவுன்சிலர்கள் வசந்தா ராமசாமி, சிட்டிபாபு, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கிருபாநிதி தாமோதரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story