முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம்
முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
திருச்சி மாவட்டம் அணியாப்பூர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் விழா அணியாப்பூர் அன்னகாமாட்சியம்மன் கோவிலில் நடைபெற்றது. அணியாப்பூர் காரியக்காரர் பாப்புகாளை நாடார் தலைமை தாங்கினார். நாடார் சங்க செயலாளர் ராஜேந்திரன் நாடார், மன்ற ஆலோசகர் தங்கவேல் நாடார் முன்னிலை வகித்தனர். பாதயாத்திரை பக்தர்களுக்கு அணியாப்பூர் நாடார் சங்க தலைவர் அமுல்நாதன் பிஸ்கட் வழங்கினார்.
அன்னதானத்திற்கான அரிசியை திருச்சி புறநகர் மாவட்ட டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற துணைச் செயலாளர் அணியாப்பூர் செல்வம் வழங்கினார். மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளை நற்பணி மன்ற முன்னாள் தலைவர் சண்முகம், சிவகுருநாதன், குமரேசன், காமராஜ், கனகராஜ், தங்கம் நாடார் ஆகியோர் வழங்கினர். விழாவில் கோவில் பூசாரிகள் பழனியப்பன், காமாட்சி, சக்திவேல், ஜோதிபாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் நற்பணி மன்ற பொருளாளர் தியாகராஜன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை மன்ற அமைப்பாளர் மணலி ராஜகோபால், பிச்சையப்பன் என்கிற காமராஜ் செய்திருந்தனர்.