கூட்டேரிப்பட்டில் பொதுமக்களுக்கு அன்னதானம்
கருணாநிதி பிறந்தநாளையொட்டி கூட்டேரிப்பட்டில் பொதுமக்களுக்கு அன்னதானத்தை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்.
விழுப்புரம்
மயிலம்
மயிலம் அருகே கூட்டேரிப்பட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்பு வழங்கினார். விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ.வும், மயிலம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான சேதுநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் மாசிலாமணி, மயிலம் வடக்கு ஒன்றிய செயலாளர் மணிமாறன், மயிலம் ஒன்றியக்குழு தலைவர் யோகேஸ்வரி மணிமாறன், வெண்ணி ஏஜென்சி உரிமையாளர் நெடி சுப்பிரமணி மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story