மேலும் ஒரு பேட்டரி கார் வசதி
பழனி முருகன் கோவிலில் மேலும் ஒரு பேட்டரி கார் வசதி செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல்
பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு உள்ளது. மேலும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு எளிதாக சென்றுவர ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகிய வசதிகளும் உள்ளன. இந்நிலையில் பழனி அடிவாரத்தில் ரோப் கார், மின்இழுவை ரெயில் நிலையங்களுக்கு சென்றுவர முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக 3 பேட்டரி கார்கள் இயங்கி வருகிறது. இந்நிலையில் பக்தர்களின் வசதிக்காக தற்போது ரூ.2 லட்சத்தில் கூடுதலாக மேலும் ஒரு பேட்டரி கார் வாங்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story