திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் 2 தண்டவாளங்களை மாற்றி அமைக்கும் பணி


திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் 2 தண்டவாளங்களை மாற்றி அமைக்கும் பணி
x
தினத்தந்தி 19 Sept 2023 2:30 AM IST (Updated: 19 Sept 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

ரெயில்களை வேகமாக இயக்க வசதியாக திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் 2 தண்டவாளங்கள் மாற்றி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது வருகிறது.

திண்டுக்கல்

ரெயில்களை வேகமாக இயக்க வசதியாக திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் 2 தண்டவாளங்கள் மாற்றி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது வருகிறது.

ரெயில்களை வேகமாக இயக்க...

தமிழகத்தில் முக்கிய ரெயில் நிலையங்களில் ஒன்றாக திண்டுக்கல் திகழ்கிறது. சென்னை, பெங்களூரு, மும்பை, திருவனந்தபுரம் உள்பட பல்வேறு ஊர்களுக்கு திண்டுக்கல் வழியாக ரெயில்கள் செல்கின்றன. எனவே திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் 80-க்கும் மேற்பட்ட ரெயில்கள் நின்று செல்கின்றன. இதுதவிர நிலக்கரி, ரேஷன் அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்களை ஏற்றிக்கொண்டு தினமும் சரக்கு ரெயில்கள் செல்கின்றன.

இதற்கு வசதியாக திண்டுக்கல்லில் 5 நடைமேடைகள் பயன்பாட்டில் இருக்கின்றன. இந்த 5 நடைமேடைகளிலும் உள்ள தண்டவாளங்கள் கான்கிரீட் தளத்தில் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இதனால் சரக்கு ரெயில்கள், திண்டுக்கல்லில் நிற்காமல் செல்லும் ரெயில்களை வேகமாக இயக்க முடியாத நிலை உள்ளது.

தண்டவாளங்கள் மாற்றி அமைப்பு

எனவே ரெயில்களை வேகமாக இயக்குவதற்கு வசதியாக தண்டவாளங்களை ஜல்லி கற்களுக்கு மேல் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதேநேரம் திண்டுக்கல் ரெயில் நிலையத்தை பொறுத்தவரை 3, 4-வது நடைமேடைகளில் தான் அதிக அளவில் ரெயில்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் 3, 4-வது நடைமேடைகளில் உள்ள தண்டவாளங்கள் மாற்றி அமைக்கப்படுகின்றன.

இதற்காக 3 ராட்சத எந்திரங்கள் கொண்டு 2 தண்டவாளங்களிலும் இருக்கும் கான்கிரீட் தளம், சிமெண்டு சிலாப்புகளை அகற்றும் பணி தீவிரமாக நடக்கிறது. இதையொட்டி அந்த நடைமேடைகளுக்கு பதிலாக 1, 2, 5-வது நடைமேடைகளில் ரெயில்கள் நின்று செல்கின்றன.


Next Story