ஜெனரேட்டரை மாற்றி அமைக்கும் பணி


ஜெனரேட்டரை மாற்றி அமைக்கும் பணி
x
தினத்தந்தி 20 Oct 2022 12:15 AM IST (Updated: 20 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் ஜெனரேட்டரை வேறு அறையில் மாற்றி அமைக்கும் பணி நடைபெற்றது.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் ஜெனரேட்டரை வேறு அறையில் மாற்றி அமைக்கும் பணி நடைபெற்றது.

அரசு ஆஸ்பத்திரி

கோத்தகிரி பஸ் நிலையத்திற்கு அருகே அரசு ஆஸ்பத்திரி உள்ளது. கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார 250-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களை சேர்ந்த நோயாளிகள் ஆஸ்பத்திரிக்கு தினமும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு ஆண்கள் மற்றும் பெண் நோயாளிகளுக்கான உள் நோயாளிகள் சிகிச்சை, வெளி நோயாளிகள், மகப்பேறு சிகிச்சை, எக்ஸ்ரே, அறுவை சிகிச்சை, குழந்தைகள் சிகிச்சை, எலும்பு முறிவு, காசநோய் உள்ளிட்ட பிரிவுகள் உள்ளன.

வெளி நோயாளிகள் பிரிவில் தினமும் 250 நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ வசதிகளை மேம்படுத்தும் பணிகள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவை தயார் செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்தநிலையில் கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் வெளி நோயாளிகளுக்காக செயல்பட்டு வந்த புதிய கட்டிடத்தில் இருந்து, அருகே உள்ள மற்றொரு கட்டிடத்திற்கு வெளிநோயாளிகள் பிரிவு மாற்றப்பட்டது.

ஜெனரேட்டர் மாற்றி அமைப்பு

தற்போது அந்த கட்டிடம் அவசர சிகிச்சை பிரிவாக மாற்றி அமைக்கும் பணிகள் பொதுப்பணித் துறை மூலம் நடைபெற்று வருகின்றன. தற்போது அவசர சிகிச்சை பிரிவுக்கு ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் எந்திரத்தில் இருந்து ஆக்சிஜனை கொண்டு செல்ல குழாய்கள் பொருத்தும் பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் ஆஸ்பத்திரியில் மின்தடை ஏற்பட்டால், உடனடியாக மின் இணைப்பு வழங்கவும், தடையின்றி மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளவும் டாக்டர்கள் குடியிருப்பு அருகே ஜெனரேட்டர் இருந்தது.

குடியிருப்புக்கு அருகே இருந்ததால் சத்தம் கேட்டதுடன், புகையும் வந்தது. இந்தநிலையில் நேற்று அங்குள்ள ஜெனரேட்டரை இடம் மாற்றி அமைக்கும் பணி நடந்தது. கிரேன் மூலம் ஜெனரேட்டர் தூக்கப்பட்டு, நுழைவுவாயில் முன்பு அமைக்கப்பட்ட அறையில் மாற்றி அமைக்கப்பட்டது. அதில் இருந்து ஆஸ்பத்திரியில் உள்ள கட்டிடங்களுக்கு, மின் ஒயர்களை ஒயரிங் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பெரும்பாலான பணிகள் நிறைவுற்ற நிலையில் அவசர சிகிச்சை பிரிவு சில நாட்களுக்குள் செயல்பாட்டிற்கு வர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story