மாற்றுக்கட்சியினர் இணைந்தனர்


மாற்றுக்கட்சியினர் இணைந்தனர்
x
தினத்தந்தி 6 Oct 2022 12:15 AM IST (Updated: 6 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மாற்றுக்கட்சியினர் இணைந்தனர்

தென்காசி

வாசுதேவநல்லூர்:

அ.தி.மு.க. முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மூர்த்தி பாண்டியன் முன்னிலையில், மாற்று கட்சியை சேர்ந்த பலர் அந்த கட்சியில் இணைந்தனர்.

கடையநல்லூர் வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் மைக்கேல் திவாகர் உள்ளிட்ட பலர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்தனர்.

அப்போது மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் சரவணன், சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி இணை செயலாளர் வி.எஸ்.சுப்பிரமணியன், கடையநல்லூர் நகர பொறுப்பாளர் இசக்கிதுறை, ஒன்றிய பொறுப்பாளர் சொக்கம்பட்டி செல்லத்துரை, மானூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் ராஜேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Next Story