மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்
செங்கோட்டையில் மாற்றுக்கட்சியினர் கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
தென்காசி
செங்கோட்டை:
செங்கோட்டையில் அ.தி.மு.க. தென்காசி வடக்கு மாவட்ட அலுவலகத்தில் வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றிய செயலாளா் வக்கீல் துரைப்பாண்டியன் தலைமையில் ஓ.பன்னீர்செல்வம் அணி மாவட்ட பொருளாளர் முருகையா அதில் இருந்து விலகி கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார். இதேபோல் வடகரையை சேர்ந்த தி.மு.க. நிர்வாகி கண்ணன் அக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தார். இந்த நிகழ்ச்சியில் வாசுதேவநல்லூர் ஒன்றிய அவைத்தலைவா் அண்ணாத்துரை, ஒன்றிய பேரவை செயலாளா் சாமிவேல், ஒன்றிய துணைச்செயலாளா் முத்துவேல்சாமி, ஒன்றிய சிறுபான்மை அணி செயலாளா் முகம்மதுநியாஸ், விசாலாட்சிமுருகன், பெரியதுரை, பேரூர் கழக அவைத்தலைவா் நீராவி, பேரூர் கழக பொருளாளா் திவான், முருகையா, மாடசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story