முன்னாள் மாணவர் சங்க ஆலோசனை கூட்டம்
தட்டார்மடத்தில் முன்னாள் மாணவர் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி
தட்டார்மடம்:
சாத்தான்குளம் புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர் சங்க ஆலோசனை கூட்டம் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெய்சிங் தலைமையில் நடைபெற்றது.
மாணவர் சங்க செயலாளர் ஜெயபிரகாஷ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பழைய மாணவர்கள் முன்னாள் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜ்மோகன், ஓய்வு பெற்ற நிர்வாக அதிகாரி ராஜதுரை, ஓய்வு பெற்ற ஆசிரியர் பால்துரை, நகர தி.மு.க. செயலாளர் இளங்கோ, முன்னாள் கவரிங் போர்டு உறுப்பினர் குணசீலன், முன்னாள் மாணவர் சங்க செயலாளர் ராமையா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் லட்சுமணன், டயோசீசன் கமிட்டி உறுப்பினர் செல்வ சிங் எட்வர்டு பிரபு சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story