முன்னாள் மாணவர் சங்க ஆண்டு விழா
திசையன்விளை அருகே முன்னாள் மாணவர் சங்க ஆண்டு விழா நடந்தது.
திசையன்விளை:
திசையன்விளை அருகே இடையன்குடி கால்டுவெல் நூற்றாண்டு நினைவு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கத்தின் 99-வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு போட்டிகள் பள்ளி வளாகத்தில் நடந்தது. போட்டியை முன்னாள் மாணவர் பாலஸ்ராஜன் தொடங்கி வைத்தார். பின்னர் நடைபெற்ற விழாவுக்கு முன்னாள் மாணவியும், ஓய்வுபெற்ற ஆசிரியருமான ஜெபக்குமாரி ஜெபக்குமார் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் சாத்ராக் ஞாதாசன் முன்னிலை வகித்தார். திசையன்விளை கிராம நிர்வாக அலுவலர் அயூப் கான், ராமகிருஷ்ணா தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சுயம்பு சிவமதி ஆகியோர் வாழ்த்தி பேசினர். சேகரகுரு பர்னபாஸ் ஜெபம் செய்தார். ஆண்டு விழா மலரை வில்சன் ஆனந்தராஜ் வெளியிட்டார். சங்க பொது செயலாளர் சாமுவேல் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் ஜெபதாசன் வரவு-செலவு அறிக்கை வாசித்தார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சாமுவேல் ராஜசிங் அருள் பரிசு வழங்கினார். இதில் முன்னாள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.