கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
கூடலூர்
கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1980 - 82 -ம் ஆண்டுகளில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி கூடலூர் ராக் கார்டன் அரங்கில் நடைபெற்றது. இதில் அப்போது பணியாற்றிய ஆசிரியர்களும் 40 ஆண்டுகளுக்கு பின் மாணவர்களை சந்தித்தனர். இதில் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டு அறிமுகப்படுத்தி கொண்டனர். தொடர்ந்து ஆசிரியர்களை கவுரவிக்கப்பட்டனர். பின்னர் பள்ளி காலத்தில் விளையாடிய பலூன் உடைத்தல், வாட்டர் பால் உள்பட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து தம்பதிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. பின்னர் பள்ளி நாட்களை நினைவுபடுத்தும் வகையில் அந்த காலக்கட்டங்களில் கடைகளில் வாங்கி சாப்பிட்ட தேன் மிட்டாய், புளிப்பு மிட்டாய், ஆரஞ்சு மிட்டாய், கமருக்கட்டு, கடலை மிட்டாய் உள்ளிட்ட இனிப்புகள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. அப்போது இளம் பருவத்தில் செய்த சுட்டித்தனங்களை நினைவுகூர்ந்து ஒருவருக்கொருவர் பேசி மகிழ்ந்தனர். பின்னர் விருந்து உபசாரங்கள் நடைபெற்றது.