முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
x

கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் 1994 - 1997-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் 25-ஆண்டுகள் நிறைவு பெற்று வெள்ளி விழா சந்திப்பு கூட்டம் கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

இதில் பல்வேறு துறைகளில் பணியாற்றிக் கொண்டிருக்கும் முன்னாள் மாணவர்கள் 90 பேர் பல்வேறு நாடுகளிலிருந்தும், பல ஊர்களிலிருந்தும் கலந்து கொண்டனர். தாங்கள் படித்த காலத்தின் நினைவுகளை பகிர்ந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். அவர்கள் பயின்ற காலத்தில் பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் விருந்தினர்கள் அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.ஆர்.அருணாசலம் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் பேராசிரியர் எ.ராஜேஸ்வரன், முன்னாள் முதல்வர் க.ஜீவானந்தம் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். முன்னாள் மாணவர் பழனியப்பன் வரவேற்று பேசினார். முன்னதாக 1994-1997 ஆண்டில் பணியாற்றிய மற்றும் தற்பொழுதும் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களையும் முன்னாள் மாணவர்கள் கவுரவித்தனர். முன்னாள் மாணவர் பாலசுந்தரம் நன்றி கூறினார். நிகழ்ச்சியினை முன்னாள் மாணவர் மணிமாறன் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாணவர்கள் துரைப்பாண்டி, குருசாமி ராஜன், கிருஷ்ணன், பிரைட், ராமசாமி, சுரேந்தர் மற்றும் முன்னாள் மாணவர் சங்க ஒருங்கிணைப் பாளர் பிரேம் குமார் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story