முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
x

முள்ளிக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது

தென்காசி

புளியங்குடி:

புளியங்குடி அருகே உள்ள முள்ளிக்குளம் பாண்டிய கோனார் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1992-93-ஆம் ஆண்டுகளில் படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் முன்னாள ஆசிரியர் கருத்த பாண்டியன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பத்மநாபன், முன்னாள் ஆசிரியை சுப்புலட்சுமி, ஆசிரியர் தமிழ்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்பள்ளியில் படித்து இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் வேலைபார்த்து வரும் இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Next Story