கொம்மடிக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பழைய மாணவர்கள் சந்திப்பு
கொம்மடிக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
சாத்தான்குளம்:
கொம்மடிக்கோட்டை சந்தோஷநாடார் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1966-ம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை பள்ளியில் படித்த பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் பனை பொருள்களான பதநீர், பனைகிழங்கு, நொங்கு, உள்ளிட்ட உணவு பொருள்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தது. இதனை பள்ளிக்கு வந்த பழைய மாணவர்கள் வாங்கி சுவைத்தனர். தங்களின் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மாலையில் பள்ளி வளாகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பழைய மாணவர்கள் கூட்டமைப்பு தலைவர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்றது. சிவானந்தபாண்டியன் முன்னிலை வகித்தார்.
விழாவில் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மாணிக்கவாசகம், முன்னாள் ஆசிரியர்கள் ரவீந்திரன், ஞானமணி, திருமாலைசூடி, தேசினி, ஜெயசிங், வின்சென்ட் ஆகியோர் பேசினர். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் தர்மேந்திரராஜ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இணை ஒருங்கிணைப்பாளர் ஹேமில்டன்வெல்சன் நன்றி கூறினார்.