ஆழ்வார்திருநகரி ஆதிநாதர்ஆழ்வார் கோவிலில் கருட சேவை
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர்ஆழ்வார் கோவிலில் கருட சேவை நடைபெற்றது.
தென்திருப்பேரை:
நவதிருப்பதி கோவில்களில் 9-வது திருப்பதியான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கும்பாபிஷேகம் நடந்த வைகாசி மாத உத்திரட்டாதி நட்சத்திர நாளன்று வருசாபிஷேகம் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வருசாபிஷேகம் நேற்று நடந்தது. அதனை முன்னிட்டு கோவிலில் காலை 5 மணிக்கு விஸ்வரூபம், காலை 7 மணிக்கு ஹோமம் நடந்தது. காலை 8.30 மணிக்கு பூர்ணாகுதி, காலை 9 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், காலை 10 மணிக்கு தீபாராதனை, நாலாயிர திவ்யப்பிரபந்தம், பகல் 12 மணிக்கு சாத்துமுறை, தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு சாயரட்சை நடந்தது. இரவு 7 மணிக்கு சுவாமி பொலிந்துநின்ற பிரான் கருட வாகனத்திலும், சுவாமி நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பின்னர் மாட வீதி உலா நடந்தது. இந்நிகழ்ச்சியில் எம்பெருமானார் ஜீயர், நிர்வாக அதிகாரி அஜித், உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.