ஆழ்வார்திருநகரியில் மாணவர்களுக்கு வாசிப்புத்திறன் பயிற்சி
ஆழ்வார்திருநகரியில் மாணவர்களுக்கு வாசிப்புத்திறன் பயிற்சி அளிக்கப்பட்டது.
தென்திருப்பேரை:
ஆழ்வார்திருநகரி அரசு கிளை நூலகத்தின் சார்பில் மாணவர்களுக்கான வாசிப்பு திறன் பயிற்சி கிளை நூலகத்தில் நடைபெற்றது. இதில் தூ.நா.தி.அ.க. நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் தினமும் பள்ளிக் கல்வியோடு நூலகம் சென்று வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தி பொது அறிவை வளர்த்துக் கொள்ளவும், நூலகத்தின் பயன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டு நூலகத்தில் உள்ள புத்தகங்களை வாசிப்பு பயிற்சி மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியை மனோன்மணி தலைமை தாங்கினார். ஆழ்வார்திருநகரி சமூக தணிக்கை வட்டார வள அலுவலர் முத்து முருகன் முன்னிலை வகித்தார். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆழ்வார்திருநகரி அரசு கிளை நூலகர் லட்சுமணக்குமார் நூலக பயன்பாடு, வாசிப்பு திறன், பொது நூலகத்துறை தொடர்பாக பயிற்சி அளித்தார். பள்ளி மாணவி அன்னலட்சுமி நன்றி கூறினார்.