எப்போதும்வென்றான் நீர்த்தேக்கத்தைதூர்வாரும்பணி விரைவில் தொடங்கும்: அமைச்சர் கீதாஜீவன்


எப்போதும்வென்றான் நீர்த்தேக்கத்தைதூர்வாரும்பணி விரைவில் தொடங்கும்: அமைச்சர் கீதாஜீவன்
x
தினத்தந்தி 22 Dec 2022 12:15 AM IST (Updated: 22 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

எப்போதும்வென்றான் நீர்த்தேக்கத்தை தூர்வாரும்பணி விரைவில் தொடங்கும் என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள எப்போதும்வென்றான் நீர்த்தேக்கத்தை தூர்வார முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்து நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த நீர்தேக்கம் தூர்வாரும் பணி விரைவில் தொடங்கும் என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

பொதுக்கூட்டம்

ஓட்டப்பிடாரம் தாலுகா பசுவந்தனை, எப்போதும்வென்றான் ஆகிய கிராமங்களில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தெருமுனை பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் காசிவிஸ்வநாதன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-

எப்போதும்வென்றான் நீர்த்தேக்கத்தை தூர்வார முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி கொடுத்துள்ளார். இதற்கான நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அந்த நீர்த்தேக்கத்தில் தூர்வாரும் பணி தொடங்கும்.

தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக வாழ உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

ஊட்டச்சத்து குறைபாடு

தமிழகத்தில் 37 லட்சம் அங்கன்வாடி குழந்தைகள் உள்ளன. இதில் ஒன்பது லட்சம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் பிறப்பதை தடுக்க, தாய்மார்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் உதவிகள் மற்றும் ஊட்டச்சத்து சத்து மாவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதேபோல பிறந்துள்ள 45 ஆயிரம் குழந்தைகளுக்கு இதயத்தில் ஓட்டை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்த குறைபாடுகளை தடுக்க அரசு, மருத்துவத் துறையுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது, என்றார்.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ, தி.மு.க. பிரசாரக்குழு செயலாளர் சேலம் சுஜாதா, தலைமை கழக பேச்சாளர் சரத்பாலா, கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சந்திரசேகர், மாவட்ட பிரதிநிதிகள் சத்தியராஜன், அருள்ரவி, பஞ்சாயத்து தலைவர் முத்துக்குமார், கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் ராஜேஷ்வேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story