விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்: கூடுதல் எஸ்.பி. பல்பீர் சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்


விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்: கூடுதல் எஸ்.பி. பல்பீர் சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
x

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் கூடுதல் எஸ்.பி. பல்பீர் சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நெல்லை,

திருநெல்வேலி மாவட்டம் அம்பையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பல்பீர் சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்..

பற்கள் பிடுங்கிய விவகாரம்

நெல்லை மாவட்டம் அம்பை பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில், போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்படுபவர்களின் பற்களை பிடுங்கி நடவடிக்கை எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் உயர் அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. இதில் அம்பை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பல்பீர் சிங் மீது குற்றம் சாட்டப்பட்டது.

விசாரணைக்கு உத்தரவு

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதற்கான விசாரணை அதிகாரியாக சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமதுசபீர் ஆலமை நியமிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் உதவி கலெக்டர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் குற்றஞ்சாட்டப்பட்ட அம்பை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பல்பீர் சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். பல்பீர் சிங்கை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் நடவடிக்கை எடுத்துள்ளார்.


Next Story